Loading Events

« All Events

  • This event has passed.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2024

14 January - 17 January

Tamilbirds > Pongal Bird Count > பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2024

Pongal Bird Count 2024 Report (Download here)

  • பறவை நோக்கல், மக்கள் அறிவியல், eBird  பற்றிய காணொளி  காண்க –

  • eBird ஓர் அறிமுகம் – PDFJPEG
  • தமிழ் நாட்டில் உள்ள சில பொதுப்பறவைகள்- PDF

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2024

தமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதே பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு.

எப்போது?

இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் தினங்களில் இப்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

என்ன செய்ய வேண்டும்?

குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு,அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்யவும். அப்பட்டியலை www.ebird.org/india ல் உள்ளிடவும். eBirdல் பறவைப் பட்டியலை தயார் செய்வது பற்றி அறிய இங்கே (PDF & JPEG)சொடுக்கவும்

பொங்கல் தினங்களில் எத்தனை முடியுமோ அத்தனை பறவைப் பட்டியல்களை உள்ளிடவும்.

பறவை பார்த்தல், eBird ஓர் அறிமுகம்

பறவைகள் குறித்தும், பறவை பார்த்தல் குறித்தும், இந்த காட்சிப்படங்களின் “An Introduction to Birds and Birdwatching” மூலம் அறிந்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் தென்படும் பறவைகளை அடையாளம் காணவும், தமிழிலில் பறவைகள் கையேடுகள் குறித்தும் இந்த காட்சிப்படங்கள் (PDF) மூலம் அறிந்து கொள்ளலாம்.

பறவைகள் கணக்கெடுப்பு ஏன்? எதற்கு? எப்படி?, eBird ஓர் அறிமுகக் கையேடு முதலிய தகவல்களை இந்த மின் நூலில் இருந்து (PDF, 31MB) அறிந்து கொள்ளலாம்.

உங்களது பகுதியில் பொங்கல் தினங்களில் பறவை பார்த்தல் மற்றும் கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால் மேற்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லூரி, பள்ளி மாணவர்களையும், ஆர்வமுள்ள அனைவருக்காகவும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.

Header Image: புதர்ச் சிட்டு Pied Bushchat Saxicola caprata by Renuka Vijayaraghavan/ Macaulay Library

Details

Start:
14 January
End:
17 January
Event Category:
Event Tags:
, ,

Venue

Tamil Nadu
India + Google Map

Organizer

Tamil Birds
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments