Selvaraj Rangasamy is the backbone of Coimbatore Nature Society (CNS), a birding group, organizing bird walks every Sunday, without a break, since 2012. We spoke to him about his fascination for birds (in English and Tamil).
1. Please tell us a bit about yourself. What do you do and where do you live?
I’m Selvaraj Rangasamy, native of Peelamedu, Coimbatore. I graduated from Coimbatore Institute of Technology, in B.Sc. (Applied Sciences), in the year 1979. I run a small industry that manufactures water pump components. Apart from my profession, I am deeply involved in Jiddu Krishnamurti’s teachings by the way of conducting discussions and dialogues on Education and the way of living. I am also heading Coimbatore Nature Society (CNS) and involved in weekly birding. Over the last 20 years, I have been visiting various organic farms with my family as we are interested in using herbal medicines for our well-being.
1. உங்களைப் பற்றிக் கூறுங்கள். என்ன செய்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்?
எனது சொந்த ஊராகிய கோயமுத்தூர் பீளமேட்டில் வசிக்கிறேன். கோயமுத்தூர் தொழில் நுட்ப கல்லூரியில் 1979ல் ஆண்டு இளங்கலை அறிவியல் முடித்து தற்போது நீர் இறைக்கும் இயத்திர பாகங்கள் செய்யும் சிறிய தொழிற்சாலை வைத்துள்ளேன். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கல்வி, வாழ்வியல் பற்றிய கலந்துரையாடல்களில் பங்கு கொள்கிறேன். கோவை இயற்கை அமைப்பில் (Coimbatore Nature Society – CNS) தலைமையேற்று, ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக பறவை நோக்குதலில் பங்கேற்கிறேன். நானும் எனது குடும்பமும் உடல் நலத்திற்காக முழுவதும் மூலிகை மருத்துவ முறைகளையே கையாள்கிறோம். இயற்கை விவசாயத் தோட்டங்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டு முடிந்த அளவு அதன் பொருட்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறேன்.
2. When and how did you get interested in birding?
Inspired by Jiddu Krishnamurti’s teachings and propelled by my own inherent affinity towards nature,with a small group is friends from the JK Center at Coimbatore, I felt prompted to explore natural areas surrounding our region. Our informal one day treks were mostly in Anaikatty, Attapadi valley and extended up to Bhavanisagar in the North and Chinnar in South. Since 1998, we spent every Sunday among the natural world for over five years. One of these days we visited SACON premises. I met Dr. Promod and came to know about nature education and his school programs. Along with him and other nature lovers of Coimbatore we started a public forum called the Salim Ali Nature Forum. I have actively participated in their programmes and undergone a Certificate course on Ornithology.
2. எப்பொழுதில் இருந்து, எவ்வாறு உங்களுக்கு பறவை நோக்கலில் ஆர்வம் உண்டானது?
ஜே.கே.யின் தத்துவங்களின் தாக்கத்தாலும், இயற்கையின் மேல் உள்ள ஈடுபாட்டாலும் ஜே.கே. ஆய்வு மையத்தில் சிலருடன் ஒரு குழுவை அமைத்து கோவையைச் சுற்றியுள்ள இயற்கையான வாழிடங்களுக்கு (1998-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்) சென்றுகொண்டிருந்தோம். அட்டபாடி பள்ளத்தாக்கில் உள்ள ஆனைகட்டி, பவானிசாகர், சின்னார் வரை எங்களது கானுலாக்கள் அமைந்தன. ஒரு நாள் சாலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆராய்ச்சி மையத்தை அனுகினோம். அங்கே டாக்டர் பிரமோத்தை சந்தித்து சாலிம் அலி இயற்கை அமைப்பை ஆரம்பித்து பறவையியலில் சான்றிதழ் கல்வியும் பயின்றோம்.
3. Do you have a favorite bird or birds? Why is it/are they your favorite?
There are many favorite birds both resident and migratory but I find migratory birds to be very unique. For example, even before knowing its name and other details, Barn swallows enthralled me with their flight patterns.
3. உங்களுக்குப் பிடித்தமான பறவை(கள்) என ஏதும் உள்ளதா? அதற்கான காரணங்களைக் சொல்லுங்கள்.
பிடித்த பறவைகள் நிறையவே உள்ளன. எனினும், வலசை வரும் பறவைகளின் சிறப்புத்தன்மைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பறவைகளப் பற்றி அறிவதற்கு முன்பே தகைவிலானின் பறக்கும் திறனைக் கண்டு வியப்படைந்துள்ளேன்.
4. Where do you enjoy birding the most?
Coimbatore Western Ghats, particularly Siruvani hills and Attappadi Valley
4. பறவைகளை நோக்க பிடித்தமான இடம் எது?
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணியும், அட்டபாடி பள்ளத்தாக்கும்.
5. Do you have a birding partner or a group you enjoy birding with? How is birding alone different from birding with others?
I go birding with my family and particularly my elder daughter Sahithya, who has become good Bird photographer. I also go weekly birding with a heterogeneous group called CNS. While birding with a group there is knowledge sharing and interesting interactions. It gives an opportunity to teach young birders and help them connect with nature. I derive an immense pleasure in interacting with fellow birders in the field. Coordinating and conducting birding trips gives me an inner satisfaction. Birding alone in nature gives me a sense of solitude which de-stresses me from the urban pollution and other impacts. It’s a kind of meditation for me which enriches my mind. With this kind ofenergy gained, I’m able to perform or meet the challenges in all walks of life.
5. பறவைகளை நோக்க யாருடன் அதிகம் செல்ல விரும்புவீர்கள்? பறவை நோக்கலுக்கு தனியாகவும், குழுவாகவும் செல்வதில் என்ன வேறுபாட்டை காண்கிறீர்கள்?
எனது குடும்பத்தினருடன், அதிலும் பறவை ஒளிப்பட கலைஞரான எனது பெரிய மகள் சாஹித்யாவுடன் அதிகமாக பறவை பார்க்க செல்வேன். ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கோவை இயற்கை அமைப்பை சார்ந்த உறுப்பினர்களுடன் பறவைகளைக் காணச் செல்வேன். குழுவுடன் செல்கையில் தகவல் பரிமாற்றமும், உற்சாகமான கலந்துரையாடல்களும் நிகழும். புதிய ஆர்வலர்களுக்கு பறவைகளை பற்றி விவரிக்கும் பொழுது மகிழ்ச்சி உண்டாகிறது. குழுவை வழி நடத்துவதில் மனநிறைவு பெறுகிறேன். தனிமையில் செல்கையில் சில தருணங்களில் அடைகின்ற ஏகாந்த நிலை, நகரங்களின் மாசு போன்ற தாக்கங்களை குறைக்கிறது. மனம் ஒருமித்த நிலையில் புத்துணர்ச்சி அடைந்து வாழ்க்கையின் பல பரிமாணங்களை எதிர் கொள்ள உதவுகிறது.
6. Anything on the birding bucket List? (Doesn`t have to be a bird, could be a place, witnessing a phenomena, etc)
Pelagic trip to enjoy the magnitude of the sea and the birds like Storm petrel.
6. பறவை நோக்குதலில் விருப்பப் பட்டியல் ஏதாவது உண்டா? (இதுவரை பார்க்காத பறவையாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, இடமோ, பறவைகள் தொடர்பான தனித்துவமான நிகழ்வைக் பார்த்தல் போன்றவையாகக் கூட இருக்கலாம்)
கடல் வழி பயணத்தில் கடல் பறவைகளையும் கடலின் மகத்துவத்தையும் பார்த்து உணர ஆசைப்படுகிறேன்.
7. Has eBird changed how you bird? How?
Yes, it increased my scientific approach and consistency in recording birds seen in a precise way or manner. Keeping regular records gives us an insight into the trends and patterns in bird populations with locations over a period of time.
7. நீங்கள் பறவை நோக்கும் விதத்தை eBird மாற்றியுள்ளதா? எனில் எப்படி?
ஆம், பறவை நோக்கலை அறிவியல் அணுகுமுறையோடு செய்ய eBird உதவுகிறது. முறையான பதிவுகள், ஒரு இடத்தில் இந்த வகையான மற்றும் இவ்வளவு பறவைகள் காணப்படுகின்றன என்ற தகவல்களை அளிக்கிறது.
8. Have you set any birding goals for the coming months?
No immediate goals, but we are conducting and coordinating weekly birding with CNS, which is happening continuously without a break for over seven years. As usual participating in AWC, synchronized wetland bird census, Pongal Bird Count, GBBC and so on with more new birders.
8. வரும் மாதங்களில் பறவை நோக்கலுக்கான இலக்கு ஏதேனும் உண்டா?
இலக்கு எனத் தனியாக எதுவும் இல்லை. ஆனால், ஏழு வருடங்களாக நிகழும் வாரந்திர பறவை நோக்கலை தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் புதிய ஆர்வளர்களை ஊக்குவிப்பதும், ஆசிய நீர் நிலை பறவைகள், ஊர்ப்புறப் பறவைகள், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு போன்றவற்றில் தொடர்ந்து பங்கு பெற வேண்டும்.
9. What is your message for fellow birders?
Maintain ethical and responsible ways of birding without disturbing birds or their habitat. Have a scientific attitude and at the same time enjoy the beauty of nature in all its dimensions.
9. சக பறவை ஆர்வலர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பறவைகளுக்கோ அதன் வாழிடங்களுகோ இடையூறின்றி பொறுப்பான, நெறியான வழிமுறைகளில் பறவை காணல் நிகழ வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு இயற்கையின் எல்லா பரிமாணங்களையும் அனுபவித்து உணர்தல் நல்லது.
See Coimbatore Nature Society (CNS) blog here. Get in touch with CNS via Facebook (link here) if you would like to participate in their weekly birding.
Header image: Barn Swallow Hirundo rustica by Renuka Vijayaraghavan (see checklist)