An engineer, a farmer, a birder, and lots more – read on to find out more (all answers in English and Tamil) about Raja Simma Pandiyan and his interests.
1. Please tell us bit about yourself. What do you do and where do you live?
I live in a small town Papanasam in Thanjavur district, Tamil Nadu. Currently, I practice organic farming. I completed my engineering degree and worked as an IT professional at Infosys for 7 years. During this stint, I got to live in Pune, Chengalpattu, Hyderabad and Denver, USA. Unfortunately, I was not a birder then. Due to the workload in an IT job and the attraction towards organic farming, I quit my job and started farming in my hometown. Apart than birding, I’m also interested in astronomy, history and Tamil literature.
நான் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம். பொறியியல் படித்து முடித்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘இன்போஸிஸ்’ல் சேர்ந்து, பூனா, செங்கல்பட்டு, ஹைதராபாத், அமெரிக்காவின் டென்வர் ஆகிய இடங்களில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பணிச்சுமை மற்றும் உழவுத்தொழில் மீது இருந்த ஈர்ப்பு ஆகிய காரணங்களினால் தகவல் தொழில்நுட்ப வேலையைத் துறந்து, 2 ஆண்டுகளாக இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளேன். வானவியல், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றிலும் ஆர்வமுண்டு.
2. When and how did you get interested in Birding?
In April 2013, I happened to read two Tamil books “Mazhai kaalamum kuyilosaiyum” (compiled by S. Theodore Baskaran) and “Paravaigalum Vedanthangalum” (compiled by Perumal Murugan) which are compilations of the writings of naturalist M. Krishnan. These books made me realise that I didn’t even know the names of the birds living around me. Then I began watching the birds which visited the neem tree near my house and started listening to their calls. Even today, I can still feel the thrill of identifying my first bird – a Red-vented Bulbul. From there, my search for birds took me beyond our neem tree.
ஏப்ரல் 2013ல் “மழைக்காலமும் குயிலோசையும்” (தொகுப்பாசிரியர் – தியோடோர் பாஸ்கரன்), “பறவைகளும் வேடந்தாங்கலும்” (தொகுப்பாசிரியர் – பெருமாள் முருகன்) ஆகிய புத்தகங்களில் நான் படித்த மா. கிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கள் தான் என்னை பறவைகளின் பக்கம் திருப்பியவை. வீட்டருகில் வாழும் பறவைகளை பற்றி கூட ஏதும் தெரியாமல் இருப்பதை உணர்ந்து, அருகில் இருக்கும் வேப்பமரத்திற்கு வந்து செல்லும் பறவைகளை கவனிக்கத் தொடங்கினேன். நான் முதன்முதலில் அடையாளம் கண்ட பறவை கொண்டைக் குருவி எனும் சின்னான் தான். அதை அடையாளம் கண்ட விதமும் அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் நிறைந்திருக்கின்றன. பிறகு என் பறவை தேடல் அந்த வேப்பமரத்தை தாண்டி பரந்து விரிந்தது.
3. Do you have a favourite bird or birds? Why is it/are they your favourite?
I have many favourite birds – the Blue-tailed Bee-eater for its colours and the way it flies to catch its prey, the Rufous Treepie for its various vocalisations, the Spotted Owlet for its cuteness. The list goes on…
வண்ணமயமான தோற்றத்துடன் அழகாகப் பறந்து பூச்சிகளை வேட்டையாடும் ‘நீல–வால் பஞ்சுருட்டான்‘, பல குரல் மன்னன் ‘வால் காக்கை‘, பகலில் தாம் ஓய்வெடுக்கும் இடத்தில் ஊடுருவுபவர்களை அழகாய் உற்று நோக்கும் ‘புள்ளி ஆந்தை‘. பிடித்த பறவைகளென இன்னும் பலவற்றை சொல்லலாம். அந்தப் பட்டியல் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும்.
4. Where do you enjoy birding the most?
I enjoy birding wherever I go. Mostly I wander around farmlands, and the irrigational canals and rivers which are prevalent in the Cauvery delta. I have a special liking for wetlands.
நான் செல்லும் இடங்களிலெல்லாம் பறவைகளை கவனிப்பதுண்டு. எனது ஊரில் எங்கும் நிறைந்திருக்கும் வயல் வெளிகள், வாய்க்கால்கள், ஆற்றங்கரைகள் ஆகியவையே நான் பறவைகளை அவதானிக்கச் செல்லும் இடங்கள். அதிகமான பறவைகளைக் காண வாய்ப்பிருக்கும் நீர்நிலைகளில் பறவைகள் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
5. Do you have a birding partner or a group you enjoy birding with? How is birding alone different from birding with others?
I go birding alone often. Some of the good things about birding in a group are knowledge sharing and interactions with other birders. When birding alone, on the other hand, we have to be more patient and learn from Mother Nature.
நான் பெரும்பாலும் தனியாகவே பறவைகள் பார்க்க செல்வேன். குழுவாக செல்லும் போது நடக்கும் அனுபவப் பகிர்வின் வழி நாம் புதிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். தனியாக செல்லும் போது, அமைதியாக இயற்கை அன்னையிடம் பாடம் கற்கலாம்.
6. Anything on the birding bucket List? (Doesn’t have to be a bird, could be a place, witnessing a phenomena, etc)
At the moment, I wish to travel and explore different places within Tamil Nadu. And then, eventually, to other states – especially in the north-eastern region of India.
முதலில், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்து அனைத்து வகையான பறவை வாழிடங்களுக்கும் செல்ல வேண்டும். பிறகு, மற்ற மாநிலங்களுக்கு, குறிப்பாக வட–கிழக்கு மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டும்.
7. Has eBird changed how you bird? How?
Yes. In the initial days of my birding, I didn’t keep any bird lists. Only after I began using eBird, I started carrying a notepad and pen while birding. Now I understand how keeping lists regularly gives us an insight into the trends and patterns in bird populations in a given place over a period of time.
நான் பறவைகளைக் காணத் தொடங்கிய நாட்களில், தினந்தினம் காணும் பறவைகளை பட்டியலிட்டு குறித்து வைக்கும் பழக்கமே என்னிடம் இல்லை. பட்டியலிடும் பழக்கமே ebirdஆல் தான் ஏற்பட்டது. ஓரிடத்தில் தொடர்ச்சியாக பறவைகளை கவனித்து பட்டியலிடும் போது, அங்கே பறவைகளின் பரவல் பற்றியும், எந்த காலங்களில் எவ்வகையான பறவைகள் வந்து போகின்றன என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
8. Have you set any birding goals for the coming months?
I don’t have any particular goals but I wish to bird as much as possible in new places.
வரும் மாதங்களுக்கென தனியாக திட்டங்களோ குறிக்கோள்களோ இல்லை. ஆனால், இயன்றவரை புதிய இடங்களுக்கு சென்று பறவைகள் நோக்க முயல்வேன்.
9. What is your message for fellow birders?
We all start with birding as a hobby, but it shouldn’t remain only a hobby. We should observe bird habits and their habitats. The hobby of birding should then evolve into an aspiration to conserve wildlife and their habitats.
பறவைகள் அவதானித்தல் ஒரு பொழுதுபோக்காக மட்டுமே இருந்துவிடக்கூடாது. பறவைகளின் இயல்புகளையும், வாழிடங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். காட்டுயிர்கள், அவற்றின் வாழிடங்கள் மீதான அக்கறையும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கரிசனம் வளர வேண்டும்.
Cover Image: Black-bellied Tern by Raja Simma Pandiyan
Congratulations and keep up your good work in birding and organic farming!
Congratulations and very Happy that Raja decided to take up farming, despite being a qualified IT professional. Farming has lost ground in many fertile areas. Wish to meet him sometime on my visit to Papanasam to learn more on his farming techniques and do some local birding.
Continue to enjoy your hobby. Wishing you all the best on your journey.
வாழத்துகள் பாண்டியன்.
Happy to see a bilingual profile thank you …..Team BCI