
- This event has passed.
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு2020
16 Jan 2020 - 19 Jan 2020

Tamilbirds > Pongal Bird Count > பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2020
|
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2020
தமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதே பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு.
எப்போது
இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் 19 வரை பொங்கல் தினங்களில் இப்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.
என்ன செய்ய வேண்டும்?
குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு,அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்யவும். அப்பட்டியலை www.ebird.org/india ல் உள்ளிடவும். eBird ல் பறவைப் பட்டியலை தயார்செய்வது பற்றி அறிய இங்கே (PDF & JPEG)சொடுக்கவும்
உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் eBird செயலியினை (app) இலவசமாக பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பட்டியலை தயார் செய்து உள்ளிடலாம். அதற்கு முதலில் eBird ல் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்.
பொங்கல் தினங்களில் எத்தனை முடியுமோ அத்தனை பறவைப் பட்டியல்களை உள்ளிடவும்.
பறவை பார்த்தல், eBird ஓர் அறிமுகம்
பறவைகள் குறித்தும், பறவை பார்த்தல் குறித்தும், இந்த காட்சிப்படங்களின் “An Introduction to Birds and Birdwatching” மூலம் அறிந்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் தென்படும் பறவைகளை அடையாளம் காணவும், தமிழிலில் பறவைகள் கையேடுகள் குறித்தும் இந்த காட்சிப்படங்கள் (PDF & JPEG) மூலம் அறிந்து கொள்ளலாம்.
பறவைகள் கணக்கெடுப்பு ஏன்? எதற்கு? எப்படி?, eBird ஓர் அறிமுகக் கையேடு முதலிய தகவல்களை இந்த மின் நூலில் இருந்து (PDF, 31MB) அறிந்து கொள்ளலாம்.
உங்களது பகுதியில் பொங்கல் தினங்களில் பறவை பார்த்தல் மற்றும் கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால் மேற்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லூரி, பள்ளி மாணவர்களையும், ஆர்வமுள்ள அனைவருக்காகவும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.
இந்த கணக்கெடுப்பு குறித்து கேள்விகள்/சந்தேகங்கள் இருப்பின் கீழிருக்கும் “comment” மூலம் தொடர்பு கொள்ளவும்.
[contact-form to=’[email protected]’ subject=’Pongal Bird Count 2017′][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Email’ type=’email’ required=’1’/][contact-field label=’Website’ type=’url’/][contact-field label=’Comment’ type=’textarea’ required=’1’/][/contact-form]